கொரோனா தொற்று தொடர்பாக, தொற்று நோயியல் பிரிவின் முக்கிய அறிவிப்பு!

கொரோனா தொற்று உறுதியான மேலும் 166 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 668,663ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட்-19 தொற்றால் மேலும் 5 பேர் மரணித்தனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த மரணங்கள் நேற்று உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், 60 வயதிற்கு மேற்பட்ட நால்வரும், 30 முதல் 59 இடைப்பட்ட ஒருவரும் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்ததாக அரசாங்கத் தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply