கிளிநொச்சியில் வைத்தியரொருவர் தனது தனியார் சிகிச்சை நிலையத்திற்கு வருகை தரும் நோயாளர்களை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு சிகிச்சையளிக்கும் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த சிகிச்சை நிலையத்திற்கு வைத்தியரை நாடுவதற்காக நோயாளர் வந்துள்ள நிலையில், அங்கிருந்த வைத்தியரின் உதவியாளர் வைத்தியரை தொலைபேசியில் அழைத்து நோயாளரை தனது பிரச்சினைகளை கூற வைத்துள்ளார்.
இதன் பின்னர் வைத்தியர் வழங்கும் அறிவுறுத்தலின் படி உதவியாளர் நோயாளருக்கு மருந்துகளை வழங்கியுள்ளார்.
குறித்த, இந்த சம்பவத்தை வைத்தியசாலைக்கு வந்த நபரொருவர் காணொளியாக பதிவு செய்துள்ளார்.
பிற செய்திகள்





