அனைத்துக் கட்சி அரசாங்கத்தின் அமைச்சுப் பதவியைப் பெறுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு உறுப்பினர் கூட தயாராக இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டு ஏறக்குறைய ஒரு மாதம் கடந்துள்ள போதிலும், சர்வகட்சி அரசாங்கம் வெறும் பேச்சுப் பெட்டியாகவே மாறியுள்ளதாகவும் ராஜகருணா தெரிவித்தார்.
சர்வகட்சி வேலைத்திட்டத்தை தான் ஆதரிப்பதாகவும், ஆனால் அமைச்சுப் பதவிகள் தேவையில்லை எனவும், சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படுமாயின், அதற்கான வேலைத்திட்டம் என்ன என்பதை ஜனாதிபதி கூற வேண்டும் எனவும் ராஜகருணா தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த ராஜகருணா, எதிர்க்கட்சிகளின் வேலைத்திட்டம் ஏற்கனவே பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட போதிலும் அரசாங்கம் இதுவரையில் அதற்கான வேலைத்திட்டத்தை முன்வைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
பிற செய்திகள்





