மாத்தறை மாவட்டத்தில் உள்ள கணவர் ஒருவர்இ தனது மனைவியை அடித்து கொன்றுவிட்டுஇ பிள்ளையை கடத்தி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தறை – மாலிம்பட பிரதேசத்தில் இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்இ
இவ்வாறு உயிரிழந்த பெண்இ
மாலிம்பட வடக்கு பிரதேசத்தை சேர்ந்த ஆடை தொழிற்சாலையில் பணியாற்றும்இ 33 வயதுடைய ஹர்ஷா நிஷானி களுஆராச்சி ஒரு பிள்ளையின் தாயே படுகொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
மொரவக்க பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய கணவர் கடந்த 9 ஆம் திகதி இரவு தனது மனைவி மற்றும் மாமியாருடன் வாய்த்தகராறு இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில்இ மாமியாரை கடுமையாக தாக்கிவிட்டு மனைவியை கொலை செய்துள்ளார்.
இவ்விடயம் பொலீசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண்ணின் கணவர் இந்த சம்பவத்தின் பின்னர் 2 வயதுடைய பிள்ளையுடன் வீட்டை விட்டு தப்பி சென்றுள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த மனைவியின் தாயார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளைஇ சந்தேக நபரை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.






