திருமலையில் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பில் செயலமர்வு..!

தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான செயலமர்வொன்று திருகோணமலையில் தீபம் விடுதியில் இடம் பெற்றது.

இச் செயலமர்வானது இன்று வியாழக்கிழமை (11) நடை பெற்றது.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனம்,எகட் ஹரித்தாஸ் நிறுவனம் இணைந்து நடாத்தப்பட்ட இச் செயலமர்வு, திருகோணமலை மாவட்ட பிரதேச ஊடகவியலாளர்களுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பில் விளக்கங்கள் வழங்கப்பட்டன.

அதன்படி, தகவல் அறியும் உரிமை என்பது ஊடகவியலாளர்களுக்கு மாத்திரமல்ல பொதுவாக எல்லாப் பிரசைகளுக்கும் பொதுவானதாகும் என கூறப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த சுமார் 25 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள், இச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

வளவாளராக இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் உத்தியோகத்தர் கமல் லியனாராய்ச்சி, மொழி பெயர்ப்பாளர் ஆர்த்தி ரவிவர்மண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply