கவிஞர்…

கவிஞர் பாண்யூரன் மாஸ்டரின் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு 14.11.2021 ஞாயிற்றுக்கிழமை பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் இலக்கியவியலாளர்களின் நூல்கள் வெளியிடப்பட்டு வரும் வரிசையில் கவிஞர் பாண்டியூரன் கவிதைகள் நூல் வடிவம் பெற்றுள்ளது.

கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.30 மணிக்கு மறுமலர்ச்சி சனசமூக நிலைய ஆலோசகரும் எழுத்தாளருமான உமா வரதராஜன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் நூல் வெளியீட்டை வெளியிட்டுவைக்கின்றார்.
இந்நிகழ்வின் முதன்மை விருந்தினர்களாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன், கல்முனை வடக்க பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இந்நிகழ்வில் முன்னாள் தமிழ் துறை தலைவர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ரோசிரியர் றமீஸ் ஏ அப்துல்லா, ஆலோசகர், மறுமலர்ச்சி சனசமூக நிலையம் டாக்டர் திருமதி. புஸ்பலதா லோகநாதன், ஆலோசகர், மறுமலர்ச்சி சனசமூக நிலையம் திரு. சபா சபேஷன், பிரதிப் பதிப்பாளர் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் திரு. சஞ்சீவி சிவகுமார், உபதலைவர் மறுமலர்ச்சி சனசமூக நிலையம் திரு. பா. செ. புவிராஜா, செயலாளர் மறுமலர்ச்சி சனசமூக நிலையம் திரு. சி. புனிதன், உபசெயலாளர் மறுமலர்ச்சி சனசமூக நிலையம் திரு. சிவவரதராஜன், கவிஞரின் குடும்ப உறுப்பினர் செல்வி நடேசன் கௌசிகா ஆகியோர் உரை நிகழ்த்தவுள்ளனர்.

நிகழ்ச்சித் தொகுப்பை ஊடகவியலா
ளர் செல்லையா பேரின்பராஜா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார். இந்நிகழ்வுக்கு ஊடக அனுசரனை கல்முனை நெற் ஊடக வலையமைப்பு.

Leave a Reply