கந்தளாய் குளத்தின் நான்கு வான் கதவுகள் திறப்பு

திருகோணமலை – கந்தளாய் குளத்தின் நான்கு வான் கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தின் பெய்து வரும் கனமழை காரணமாக கந்தளாய் குளத்தின் மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக நான்கு வான் கதவுகள் அரை அடிக்கு இன்று(11) திறந்து விடப்பட்டுள்ளதாக கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்தார்.

கந்தளாய் குளத்தின் நீரினைப் பயன்படுத்தி பதினாயிரத்து 600 ஏக்கரில் வேளாண்மை செய்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது, குளத்தில் 88271 ஏக்கர் அடி நீர் உள்ளதாகவும் கந்தளாய் நீர்ப்பாசன பொறியலாளர் தெரிவித்தார்.

தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் அனைத்து வான் கதவுகளை திறந்து விடுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply