யாழில் பரதநாட்டிய அரங்கேற்றம்!

திருமறைக் கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியின் மாணவியும் , நாட்டிய கலாவித்தகர் ஸ்ரீமதி சுதர்சினி கரன்சனின் மாணவியுமான எறின் கிளன்சியா கிளன் சியஸ் லொயலாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் நாளை சனிக்கிழமை பி.ப. 2.30 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது .

திருமறைக் கலாமன்றத்தின் பிரதி இயக்குநர் யோ.யோண்சன் ராஜ்குமார் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக லண்டன் , சலங்கை நர்த்தனாலயா நுண்கலைக் கல்லூரியின் இயக்குநர் கலாநிதி ஜெயந்தி யோகராஜாவும் , சிறப்பு விருந்தினர்களாக ஓய்வுநிலை நடனத்துறை விரிவுரையாளர் சாந்தினி சிவநேசன் , யாழ் . கல்வி வலய நடனபாட ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர் பத்மினி செல்வேந்திரகுமார் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக சுண்டிக்குளி மகளிர் கல்லூரி அதிபர் துஷ்யந்தி துஷிதரன் , ஏஞ்சல் சர்வ தேச பாடசாலை பிரதி அதிபர் அக்னஸ் செல்வராணி சத்தியசீலன் ஆகிய யோரும் கலந்து கொள்ளவுள்ளனர் .

அணிசெய் கலைஞர்களாக ஸ்ரீமதி சுதர்சினி கரன்சன் நட்டுவாங்கம் , நடன அமைப்பையும் , யாழ் . பல்கலைக்கழக சேர் . பொன்னம்பலம் இராமநாதன் அரங் காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீடத்தின் இசைத்துறை முதுநிலை விரிவுரையாளர் இசைமணிதவநாதன் றொபேட் குரலிசையையும் , மிருதங்க ஞானவாரிதி சி.துரைராஜா மிருதங்க இசையையும் , சுருதிவேந்தன் அ.ஜெயராமன் வயலின் இசையையும் வழங்கி அரங்கேற்றத்துக்கு அணி செய்யவுள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply