அம்பேவெல நீர்த்தேக்கத்தில் மிதக்கும் எலிகளின் உடல்கள்!

ஹொர்ட்டனில் அம்பேவெல நீர்த்தேக்கத்தில் எலிகள் மிதப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாதுகாக்கப்பட்ட பகுதியில் வேட்டையாடுவதற்காக வளர்க்கப்பட்டு கைவிடப்பட்ட நாய்கள் இருப்பதாகவும், எலிகளை நாய்கள் கடித்து துரத்துவதால், எலிகள் நீர்த்தேக்கத்தில் குதித்து நீரில் மூழ்கி இறக்கின்றன.

சிறிய குட்டிகள் முதல் நன்கு வளர்ந்த பத்து எலிகள் வரை நீர்த்தேக்கத்தில் விழுந்து இறப்பதாகவும், இதனால் நீர்த்தேக்கத்தை சுற்றி கடும் துர்நாற்றம் வீசுவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் வனஜீவராசிகள் அலுவலகத்திற்கு அறிவித்தும் எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், எலிகள் அழிவினால் சுற்றுசூழல் பாதிப்பும் ஏற்படுவதால் நாய்களை வேறு பகுதிக்கு கொண்டு செல்லவோ அல்லது கட்டுப்படுத்தவோ அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply