குடிபோதையால் ஏற்பட்ட வாகன விபத்தில் மூவர் காயம்

மீகொட, ஓக 19

மீகொட பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் காயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது.

குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் பயணித்த அதி சொகுசு கார் மெகொட கஜுகஹயத்தெனிய பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி வீடொன்றின் சுவரை கவிழ்த்து வீட்டின் முன்பகுதியில் மோதி நின்றுள்ளது.

Leave a Reply