இனப்படுகொலையாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துங்கள்- ஐ.நா பிரதிநிதிகளிடம் கோரிக்கை முன்வைப்பு!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கமாகிய நாங்களும் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் பிரதிநிதிகளும் இணைந்து இன்றைய தினம் ஐ.நா பிரதிநிதிகளைச் சந்தித்திருந்தோம் என வடக்கு,கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாவதி தெரிவித்துள்ளார்.

ஐ.நா பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து சமூகம் ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த அவர்

இதுவரை காலமும் கடந்து வந்த பாதைகள் , ஏமாற்றங்கள் போன்றவற்றை விளக்கமாக கூறியிருந்தோம்.இந்த இனப்படுகொலையினை செய்தவர்களுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்பதை ஆணித்தரமாக கூறியிருந்தோம்.

நாம் கூறியவற்றை அக்கறையுடன் கேட்டு சுருக்கக் குறிப்பு எடுத்ததுடன் எங்களால் வழங்கப்பட்ட மகஜரையும் வேண்டிக்கொண்டார்கள்.

அவர்கள் ஒவ்வொருவரினதும் இழப்புக்களை தனித்தனியாக கேட்டு கண் கலங்கி மிக கவலையுடன் துக்கத்தினை தெரிவித்திருந்தார்கள்.

ஜெனிவா கூட்டத்தொடரில் இந்த உரையாடலுக்கான பிரதிபலிப்புக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் என நம்புகிறோம்.

எங்களது கோரிக்கைகளை அவர்கள் ஏற்றுகொண்டுள்ளார்கள்.என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply