பளையில் வெடிப்பொருட்கள் மீட்பு: ஒருவர் கைது!

பளை‌ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நேற்று (18) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பளை பிரதேச இத்தாவில் பகுதியில் நபர் ஒருவரின் வீட்டில் வெடிபொருட்கள் வைத்திருப்பதாக பளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த வீடு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன் போது கழற்றிய நிலையில் 910 கிராம் வெடிமருந்து மற்றும் இரண்டு மோட்டார் குண்டுகள் மீட்கப்படுள்ளன.

இதனையடுத்து சந்தேகநபரை இன்று (19) கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply