திங்கள்கிழமை முதல் முட்டை விலை குறையும்

எதிர்வரும் திங்கட்கிழமை (22) முதல் முட்டையின் விலை குறைக்கப்படும் என இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் இன்று அறிவித்துள்ளது.

அதன்படி முட்டை ஒன்றின் விலை 5 ரூபாவால் குறைக்கப்படும் என சங்கம் தெரிவித்துள்ளது.

அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம், கால்நடை மருத்துவர் சங்கம், கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் ஏனைய நுகர்வோர் உணவு உற்பத்தியாளர்கள் தாம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் பிரதமருடன் இன்று கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

கோழி தீவன தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை விலையை உயர்த்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் முட்டை ஒன்றின் விலை 60 ரூபா வரையில் உயர்வடைந்துள்ளது. இதனால் முட்டையை நுகர்வோர் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தநிலையில் வரும் திங்கட்கிழமை முதல் முட்டை விலை குறைக்கப்படும் என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை, முட்டை உற்பத்தியாளர்கள் விலையை குறைக்காவிட்டால் முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை அறிமுகப்படுத்தப்படும் என வர்த்தக அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply