நாட்டில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 19 பேர் நேற்று உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, நாட்டில் இதுவரை தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,927 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 30 – 59 வயதுக்கு இடைப்பட்டவர்களுள் 03 ஆணும் 01 பெண்ணும், 60 வயதுக்கு மேற்பட்மோரில் 08 ஆண்களும் 07 பெண்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் மேலும் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நாட்டில் இதுவரை தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 547,873 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 272 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 522,789 ஆக அதிகரித்துள்ளது.






