பயங்கரவாத தடைச்சட்டம் விரைவில் நீக்கப்படும்- யாழில் வைத்து உறுதியளித்த சுசில்!

இலங்கையில் தற்பொழுது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச்சட்டம் விரைவில் நீக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருக்கும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்தவிற்குமான  கலந்துரையாடல் இன்று மதியம் 1மணியளவில்  இடம்பெற்றது. இதன் பொழுது கருத்து தெரிவித்த யாழ் பல்கலைக்கழக  கலைப்பீட மாணவர் ஒன்றியதலைவர் ஜெல்சின்,

எங்களுடைய பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளராக இருந்த பபில்ராஜ் மற்றும் திவாகர் ஆகிய இருமாணவர்களும் கடந்த 2019 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய அலுவலகத்தில் தமீழீழ விடுதலைப்புலிகளை பிரதிபலிக்கும் புகைப்படங்கள் இருந்தமைக்காக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ கைது செய்யப்பட்டு இன்றும் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறியும் அவர்களுக்கான வழக்கு தொடனந்து கொண்டிருக்கின்றது.
ஆகவே மாணவர்கள், ஒன்றியத்தின் பிரதிநிதிகளாக அவர்களுடைய வழக்கு தொடரப்பட்டுள்ளது விரைவில் அவர்களை வருடத்தை செய்யுமாறு கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.

இதனையடுத்து கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த,

மாணவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது. வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும்  பலர் இந்த சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

இந்த சட்டம் விரைவில் நீக்கப்பட உள்ளது. குறித்த இரு மாணவர்களது வழக்கு குறித்து நான் சட்டமா அதிபருடன் தொடர்பு கொண்டு விரைவில் அவர்களை விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை கருத்திற்கொள்கின்றேன்.

ஒரு வழக்கறிஞராக பல்கலைக்கழக மாணவர்களின் நீதிசார்பாக நான் வழக்குகளில் ஆஜராகியுள்ளேன்.

வெகுவிரைவில் இச்சட்டம் நீக்கப்படும் என தெரிவித்தார். மேலும் இனகுறித்த மாணவர்களின் வழக்கு எண் விபரங்களையும் பெற்றுக்கொண்டார்.
இதன் பொழுது பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிய பற்குணராஜா,பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க,யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply