பதவி விலகுவதாக சிறிசேன நாடாளுமன்றில் அதிரடி அறிவிப்பு!

தன்மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறப்பேன் என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றியிருந்த அமைச்சர் மஹிந்தனந்த அளுத்கமகே, ‘மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி பதவியில் இருக்கும் போது, கொழும்பில் மூன்று வீடுகளை நிர்மாணித்து கொண்டார்’ என குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதற்கு பதில் அளித்த மைத்திரிபால சிறிசேன,

முன்னாள் ஜனாதிபதிகள் ஓய்வு பெறும் போது நிரந்தர வீடு வழங்கப்படும். அதனடிப்படையில் சட்ட ரீதியாக தனக்கு ஒரு வீடு கிடைத்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தற்போது வசிக்கும் வீடும் அவ்வாறு வழங்கப்பட்ட வீடாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply