கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை உயர்வடைகின்றது எனப் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் உப தலைவர் எஸ்.ஏ.யூ.ரி குலதிலக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் டிசம்பர் மாதமாகும் போது நாட்டின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்க கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், தொடர் போராட்டங்கள் மற்றும் பண்டிகைகள் காரணமாக மக்களின் நடமாட்டம் அதிகரித்து இருப்பதாகவும் பலதரப்பட்ட தரப்பினாலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.






