பாண்டிருப்பில் கடலரிப்பின் கோரம் தொடர்கிறது… வீதிகள் கடலுக்குள் சங்கமம்

கல்முனைப் பிரதேசம் பாண்டிருப்பில் கடலரிப்பின் கோரம் அதிகமாகக் காணப்படுகின்றது. படிப்படியாக் கடலரிப்பின் வேகம் அதிகரித்து பாண்டிருப்பிலுள்ள கடற்கரை வீதியின் ஒரு பகுதி முழுமையாக கடலுக்கள் சென்றுள்ளதுடன் மீதமுள்ள கடற்கரை ஏனைய வீதியும் கடலுக்குள் செல்லும் அபாயம் காணப்படுகின்றது. கடலரிப்பு எற்பட்டு கடலலை படிப்படியாக முன்னர் இருந்து கடற்கரை வீதி தாண்டி கடலலலைகள் பாய்கின்றது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தோடு காணப்படுகின்றனர். அத்தோடு இந்த கடலரிப்பைத் தடுப்பதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாண்டிருப்பு கடற்கரையோரமாக கல்லணைகளை போடுவதற்குரிய நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply