மரக்கறி விலைகள் பெருமளவு வீழ்ச்சி

தம்புள்ளை,ஓக 19

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை பெருமளவு குறைந்துள்ளதாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

பொருளாதார மையத்தில் மரக்கறிகளின் விலை குறைந்துள்ள போதிலும், நாடளாவிய ரீதியில் உள்ள ஏனைய சந்தைககளில் மொத்த மற்றும் சில்லறை மரக்கறி விலைகள் அதிகரித்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

550 முதல் 600 ரூபா வரை அதிக விலைக்கு விற்கப்பட்ட போஞ்சி 220-300 ரூபாவுக்கும், வெண்டைக்காய் 100 ரூபாவுக்கும் விற்கப்படுவதாக விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கறி மிளகாய், கத்தரிக்காய் தவிர அனைத்துக் காய்கறிகளும் தற்போதைய விலையை விட 50% குறைவாக விற்கப்படுவதாகவும், காய்கறிகளை மிகக் குறைந்த விலையில் விற்க நாள் முழுவதும் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று பிற்பகல் ஒரு கிலோ மரக்கறிகளின் மொத்த விலை

கோவா 160 -180
போஞ்சி 220 – 240
லீக்ஸ் 100 – 130
கரட் 220 – 280
பீட்ரூட் 55 – 70
தக்காளி 180-200
முள்ளங்கி 50 – 80
நோகோல் 120 -150
வெள்ளரிக்காய் 50 -70
உருளைக்கிழங்கு 130 -140
பீர்க்கங்காய் 130 -150
வெண்டைக்காய் 40 – 70
புடோல் 160 -180
பாகற்காய் 250 -280
பூசணி 120 – 130
கத்திரிக்காய் 320 – 350
பயற்றங்காய் 90 – 120
சிறகவரை 160 -200
பச்சை மிளகாய் 320-350
கறி மிளகாய் 450 – 500
தக்காளி 160 -220
பெரிய வெங்காயம் 130-140

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *