நாட்டில் மேலும் 188 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், இன்று இதுவரையில் 715 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரை தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 548,061 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 272 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 522,789 ஆக அதிகரித்துள்ளது.






