2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டம்இ பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கவுள்ள நிலையில்இ அத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சி ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளது.
கொழும்பு – லிப்டன் சுற்று வட்டத்திற்கு அருகில்இ இந்த ஆர்ப்பாட்டம்இ இன்று (12) மாலை நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
வரவு-செலவுத்திட்டத்தின் ஊடாக எந்தவித நிவாரணமும் மக்களுக்கு கிடைக்காது என எதிர்வு கூறியுள்ள ஐக்கிய தேசியக் கட்சிஇ உரிய நிவாரணத்தை மக்களுக்கு பெற்றுக்கொடுக்குமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என அக்கட்சி அறிவித்துள்ளது.
கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (11) இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதில்இ முன்னாள் எம்.பிக்களான சாகல ரத்நாயக்கஇ பாலித்த ரங்கே பண்டார உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.






