ஒன்றுகூடல்கள் குறித்து புதிய கட்டளைகள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு!

<!–

ஒன்றுகூடல்கள் குறித்து புதிய கட்டளைகள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு! – Athavan News

ஒன்றுகூடல்கள், செயற்பாடுகள், நிகழ்வுகள் அல்லது அதுபோன்ற கூட்டங்கள் நடைபெறும் இடங்களுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் முன் அனுமதியைப் பெறுவது கட்டாயமாக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தலை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல வெளியிட்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்திற்கு அமைய, அதிவிசேட வர்த்தமானியினூடாக புதிய கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய,

  • முழு நாட்டிற்கும் அதிகாரம் பெற்றுள்ள உத்தியோகத்தர் ஒருவரால் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்காக பிறப்பிக்கப்படும் கட்டளைகளும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
  • அனுமதி பெறாது ஒன்றுகூடல்கள், செயற்பாடுகள், ஒன்றுகூடலுக்கான சந்தர்ப்பம் ஏற்படும் வகையிலான நிகழ்வுகள் என்பவற்றை நடத்தக்கூடாது.
  • எதேனுமொரு தரப்பினரால் இவ்வாறு விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
  • குறித்த விதிமுறைகளை மீறும் வகையிலான செயற்பாடுகள் அல்லது நிகழ்வுகளுக்கு அதிகாரிகளால் அனுமதி வழங்கப்பட்டாலும் அவற்றில் பொது மக்கள் கலந்துகொள்ளக்கூடாது


Leave a Reply