யாழ்ப்பாணத்தில் இளைஞர்களின் பங்களிப்புடன் RTI மன்றம் உருவாக்கம்

யாழ்ப்பாணத்தில் உள்ள RTI மன்றம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் ஆகியன இணைந்து யாழ்ப்பாண மாவட்ட RTI இளைஞர் மன்றத்தை உருவாக்கியுள்ளன.

யாழ்ப்பாணம் – அரியாலையில் அமைந்துள்ள சர்வோதயம் அமைப்பின் கேட்போர் கூடத்தில் கடந்த திங்கட்கிழமை இந்த நிகழ்வு இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்களின் ஒத்துழைப்புடன் இந்த மன்றம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி சமூகத்தில் நிலவும் ஊழல்களை வெளிக்கொண்டு வருவதற்கு தாம் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்று இளைஞர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply