பேரழிவு காலத்திலும் கொடுங்கோல் அரசு பிக்பாக்கெட் அடிக்கிறது! சஜித் சாடல்

இந்த பேரழிவு தருணத்திலும் தற்போதைய கொடுங்கோல் அரசாங்கம் பிக்பாக்கெட் அடித்துக் கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சதித் பிரேமதான சாட்டியுள்ளார்.

நாட்டின் கொடிவினையின் அடையாளமாக மாறிய ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, பொது மக்களுடன் இணைந்து இந்த நாட்டில் மக்கள் சார்பான-மக்கள் அரசாங்கத்தை உருவாக்குவதற்கான போராட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கும் என்றும் அவர் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கடுவலை தொகுதி அமைப்பாளர் ஹிருணிகா பிரேம சந்திரவின் ஏற்பாட்டில் அரசாங்கத்துக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் புவிசார் அரசியவில் செல்வாக்கு மிக்க நாடுகளின் சூதாட்ட களமாக இலங்கை மாறியுள்ளதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அன்று தேசிய பாதுகாப்பு குறித்து கூச்சலிட்ட அரசாங்கம் தற்போது இது தொடர்பில் சிறுதளவேனும் செவி சாய்க்காதுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மக்களுக்காக உங்களை அர்ப்பணிக்க முடியுமாக இருந்தால் – மக்களின் குறைகளை உணர முடியுமாக இருந்தால் – நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்
என்ற உண்மையான விருப்பம் இருந்தால் – அப்படிப்பட்ட அனைவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் கதவுகள் திறந்திருக்கின்றன என எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மனிதாபிமானமும் உணர்வும் கொண்ட நாட்டை உருவாக்கத் தமக்கு வார்களிக்குமாறு நாட்டு மக்களைத் தான் கேட்டுக் கொண்டேன்.

ஆனால் அன்று வெற்று வீரத்துக்காக பலர் வாக்களித்தனர் எனவும். அதன் விளைவை இன்று நாடு முழுவதும் அனுபவிக்க வேண்டி நேரிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இன்று முழு நாட்டுக்கும் தேவை மனிதாபிமானமும் உணர்வு பூர்வமான அரசாங்கமும் தான் எனக் கூறினார்.

அதற்கான உத்தரவாதம் அரசியலுக்கு பதிலாக தேசத்துக்கான சேவையை வழங்கும் ஐக்கிய மக்கள் சக்தியே என்றும் அவர் கூறினார்.

Leave a Reply