தெல்லிப்பழை – ஏழாலை பகுதியில் வசிக்கும் 23 வயது இளைஞன் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேலும் தெரியவருகையில்,
வாள்வெட்டிற்கு இலக்கான இளைஞன், தனது வீட்டு படலையில் நின்றுள்ளார்.
அப்போது, ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த இளைஞன் மீது வாள்வெட்டினை மேற்கொண்டனர்.
இவ் வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞனது கையில் பாரிய காயம் ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அவர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது தொடர்பாக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






