கற்பிட்டி நகரில் சகல வசதிகளுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொதுநூலகம் நேற்று வியாழக்கிழமை (11) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
குறித்த பொதுநூலகத்தை , கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் ஏ.எம்.இன்பாஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டுஉத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் கற்பிட்டி பிரதேச சபையின் செயலாளர் மங்கள ராமனாயக்க உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்த பொதுநூலகத்தை நிர்மாணிப்பதற்காக கற்பிட்டி பிரதேச சபை ஒரு கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது.
இதேவேளை, கற்பிட்டி பிரதேச சபையின் நிதியொதுக்கீட்டில் குறிஞ்சிப்பிட்டி பகுதியில் 19 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொது விளையாட்டு மைதானமும், சம்மட்டிவாடி பகுதியில் 15 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொதுநூலகமும் நேற்றைய தினம் பிரதேச சபை தலைவரினால் திறந்துவைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






