மீண்டும் குறைக்கிறது லாஃப் எரிவாயு விலை!

லாஃப் எரிவாயு நிறுவனம் உள்நாட்டு எரிவாயு கொள்கலன்களின் விலையை மேலும் குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இதற்கமைய, லாஃப் எரிவாயுவின் விலை அடுத்த மாதம் குறைக்கப்படும் என லாஃப் குழுமத்தின் தலைவர் W.KH வாகபிட்டிய தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் லாஃப் எரிவாயுவின் விலை 1050 ரூபாவால் குறைக்கப்பட்டதாகவும், அடுத்த மாதமும் அதே விலை குறைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 12.5 கிலோ எடை கொண்ட லாஃப் எரிவாயு கொள்கலன்களின் தற்போதைய விலை 5,800 ரூபாவாகவும், 5 கிலோ எடை கொண்ட கொள்கலன்களின் விலை 2,320 ரூபாவாகவும், 2.5 கிலோ எடையுள்ள எரிவாயு கொள்கலன்களின் விலை 928 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *