செக்கனுக்கு 10 ஆயிரம் அடி கடலில் பாயும் அருவியாறு!

சில தினங்களாக நாடு முழுவதும் பெய்துவரும் கடும் மழை காரணமாக மன்னார் அருவி ஆற்றிலிருந்து செக்கனுக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலுக்குள் பாய்ந்துகொண்டிருக்கின்றது.

நேற்றுமுன்தினம் புதன்கிழமை 10 அடி 9 அங்குலம் ஆக இருந்த நீர் கொள்வனவு தற்போது 10 அடி 7 அங்குலமாக குறைவடைந்துள்ளது. வரும் நாள்களில் மழை குறைவடைவதற்கான சாத்தியம் காணப்படுவதால் ஆற்றின் நீர்மட்டமும் குறையக்கூடும் என்று மன்னார் நீர்ப்பாசன பணிப்பாளர் நடராசா யோகராசா தெரிவித்தார்.

மன்னார் அருவியாறு, வடமத்திய மாகாணத்திலிருந்து ஆரம்பிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply