பருத்தித்துறையில் தனித்து விடப்பட்ட சிறுமி – விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 19 மற்றும் 24 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரும் பருத்தித்துறை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, “பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் தனித்து நின்ற 15 வயதுச் சிறுமியிடம் முன்னெடுக்கபட்ட விசாரணையை அடுத்து, இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு நேற்று முன்தினம் இரவு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி, இருவேறு நேரங்களில் 2 இளைஞர்களினால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி சட்ட மருத்துவ வல்லுநரின் மருத்துவ அறிக்கைக்காக பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply