யுகதனவி ஒப்பந்தம் தொடர்பில் சட்டமா அதிபரின் கோரிக்கை

யுகதனவி மின்னுற்பத்தி நிலைய ஒப்பந்தத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை பூரண நீதியரசர்கள் ஆயத்தின் முன்நிலையில் விசாரிக்குமாறு உயர்நீதிமன்றத்திடம் சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, சட்டமா அதிபர் சார்ப்பில் ஆஜரான மேலதிக செலிஸிட்டர் ஜெனரல் பர்சான ஜமீலினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கெரவலப்பிட்டிய யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவது தொடர்பான அமைச்சரவையின் தீர்மானத்தைச் சவாலுக்கு உட்படுத்தும் வகையில் மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் எல்லே குணவங்ச தேரர் ஆகியோர் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

அதன் பின்னர், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவால் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply