புதிய களனி பாலத்தின் நிர்மாண பணிகள் காரணமாக பல வீதிகளுக்கு பூட்டு

புதிய களனி பாலத்தின் நிர்மாண நடவடிக்கை காரணமாக பல வீதிகள் மூடப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் பேலியகொடை இடைமாறல் மற்றும் புதிய களனி பாலம் வரையான பகுதி மூடப்படவுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை குறித்த பகுதிகள் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த வீதிக்கு பதிலாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை சாரதிகளை கோரியுள்ளது.

Leave a Reply