சீரற்ற காலநிலை காரணமாக தொடர்சியாக மீனவர்கள் பாதிப்பு

தொடர்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக,மன்னார் மாவட்ட மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மன்னார் தீவக பகுதிகளை சூழ்ந்த கடல் பரப்பின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகின்றமையினாலும் கடல் பகுதியில் அதீத காற்று வீசுவதனாலும் மீன் பிடி நடவடிக்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், மூன்றாவது நாளாக அதிகளவான மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளை தவிர்த்து வருகின்றனர்.

அதே நேரம் உள்ளூர் மீனவர்களுடைய படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு கடற்கரையை அண்மித்த பகுதிகளில் அடையவிடப்பட்டுள்ளமையும் காணக்கூடியதாக உள்ளது.

Leave a Reply