மூன்று அமைச்சர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவர்! ராஜித தெரிவிப்பு!

அமைச்சர்கள் வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவங்ச, உதய கம்மன்பில உள்ளிட்டவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், பிளவுபடுவதற்கு முன்னர் போராட்டம் நடக்கும். தற்போது அந்த அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த கட்டமாக அந்த அணியினர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவார்கள்.

அவ்வாறு அரசாங்கத்தில் இருந்து வெளியேறவில்லை என்றால் அவர்களுக்கு அரசியல் எதிர்காலம் இருக்காது. இதனை அந்த அணியினர் நன்கு உணர்ந்துள்ளனர்.

உரிய நேரம் வரும் வரை அவர்கள் காத்திருக்கின்றனர். எவ்வாறாயினும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் இந்த அணியினர் நாங்கள் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைய மாட்டார்கள்.

அவர்கள் தனியான அணியாக எதிர்க்கட்சியில் இருப்பார்கள் என நம்புகிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply