தம்பாட்டியில் பெண் மீது கத்திவெட்டு!

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பாட்டி பகுதியில் பெண்ணொருவரின் கையை துண்டாடும் வகையில் நேற்றிரவு கத்தி வெட்டு இடம்பெற்றுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸ் தலைமை அலுவலகப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

வீட்டுக்குள் அத்துமீறி உட்புகுந்த நபர், கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். படுகாயமடைந்த குறித்த பெண், நோயாளர் காவு வண்டி மூலமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்றும் மற்றொருவர் தேடப்பட்டுவருகின்றார் என்றும் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

Leave a Reply