
தற்போது உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை மீண்டும் அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வார இறுதியில் 0.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்த விலை உயர்வுக்கு ஏற்ப WTI கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 90.77 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. அதேவேளை, பிரென்ட் ரக கச்சா எண்ணெய் ( Brent crude oil) பரல் ஒன்றின் விலை 96.72 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குறித்த கச்சா எண்ணெய்யின் விலைகளானது குறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





