ஆஸ்திரியா 4 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ பொருட்கள் இலங்கைக்கு நன்கொடை!

ஆஸ்திரிய அரசாங்கம் 4 மில்லியன் ரூபா பெறுமதியான அத்தியாவசிய மருத்துவ பொருட்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

27 அத்தியாவசிய மருத்துவ பொருட்கள் அடங்கிய உதவிப்பொதி, இந்தியாவுக்கான ஆஸ்திரிய தூதுவரினால், இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவிடம் கையளிக்கப்பட்டது.

இலங்கையில், அவசரமாகத் தேவைப்படும் மருந்துகளுக்காக இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளுக்கு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த மருத்துவப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

மருந்து பொருட்களை பெற்றுக்கொண்ட உயர்ஸ்தானிகர், ஆஸ்திரிய அரசுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.

புதுடெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஒரே நேரத்தில், அங்கீகாரம் பெற்ற 94 வெளிநாட்டுத் தூதுவர்களுக்கும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சுக்கும் இடையிலான முக்கிய ஒருங்கிணைப்பு புள்ளியாக செயல்படுகிறது.

Leave a Reply