மொறட்டுவ, ஏகொடஉயன பகுதியில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இரு தரப்பினருக்கு இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் அதிகரித்து, கைகலப்பாக மாறிய நிலையிலேயே இந்த கொலைச் சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,
இதன்போது 71 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவரே உயிரிழந்தார்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.