வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்து வீதிக்கு இறங்கிய ஐக்கிய தேசியக் கட்சி!

2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பொது மக்களுக்கு எவ்வித சலுகையும் வழங்கப்படவில்லையென வலியுறுத்தி ஐக்கிய தேசியக் கட்சி போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.

கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் இன்று மாலை பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது.

கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன, பொதுச் செயலாளர் ரஞ்சித் பண்டார, தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க, முன்னாள் அமைச்சர் சாகல ரட்ணாயக்க உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

அத்தியாவசியப் பொருட்கள்; நாட்டு மக்களின் சாதாரண வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் அனைத்து காரணிகளும் அதிகரித்துள்ளமைக்கு கண்டனம் வெளியிடப்பட்டதுடன், மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கையெடுக்க வேண்டுமென இதன்போது வலியுறுத்தப்பட்டது.

பட்ஜெட்டில் அரச தொழில் வாய்ப்பை எதிர்பார்த்த இளையோருக்கு ஏமாற்றம்! சபா குகதாஸ்

Leave a Reply