எரிபொருள் விலை சூத்திரம் அத்தியவசியமானது! இலங்கை மத்திய வங்கி

அரச வங்கி கட்டமைப்பின் ஸ்திரத்தன்மைக்காக எரிபொருள் விலை சூத்திரம் அத்தியவசியமானது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அண்மைய கால பொருளாதார செழிப்பு என்ற பெயரில் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இலங்கை மத்திய வங்கி இதனை அறிவித்துள்ளது.

மேலும், விலை சூத்திரத்தின் ஊடாக எரிபொருள் விலையை நிர்ணயிப்பதன் மூலம் எரிபொருள் விலைகள் குறித்து மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பை முன்னேற்ற முடியும்.

அத்துடன் விலை அதிகரிப்புகள் தொடர்பான செயற்பாடுகளை வெளிப்படைத்தன்மையுமடன் முன்னெடுக்க முடியும்.

விலை அதிகரிப்புக்கு அமைய மற்றும் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கலாம் என்ற முன்னறிவிப்பு காரணமாக ஏற்படும் எரிபொருள் நெருக்கடிக்கு விலை சூத்திரம் மாத்திரம் போதுமானதாக இருக்காது

அதனை தவிர உலக சந்தையில் எரிபொருளின் விலைகள் குறையும் போது அதன் பிரதிபலனை உடனடியாக நுகர்வோர் பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எது எப்படி இருந்த போதிலும் எரிபொருள் விலைகள் சர்வதேச சந்தையில் ஏற்றம், இறக்கம் காணும் போது, இலங்கையில் எரிபொருளின் விலைகளை நிர்ணயிப்பதற்காக கடந்த நல்லாட்சி அரசாங்கம் இதே விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்தியது. எனினும், அன்றைய எதிர்க்கட்சியான தற்போதைய ஆளும் கட்சியினர் அதனை கடுமையாக விமர்சித்தனர்.

கட்டுநாயக்க அதிவேக வீதியில் பயணிப்போருக்கு அறிவிப்பு

Leave a Reply