சு.கவை பலப்படுத்தும் முயற்சியில் மைத்திரி!

நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்காத 30 கட்சிகள் மற்றும் அரசியல் குழுக்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் பொதுவான கூட்டமைப்பாக இயங்க இணக்கம் தெரிவித்துள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடந்த சந்திப்பிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இணக்கம் வெளியிட்டுள்ள கட்சிகளும், அரசியல் குழுக்களும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் முதற்கட்ட பேச்சுக்களை விரைவில் நடந்தும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply