பருத்தித்துறையில் நேற்று அதிகாலை மீட்கப்பட்ட சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸாரால் மீட்கப்பட்ட சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை, சட்ட வைத்திய அதிகாரியிடம் சிறுமி ஒப்படைக்கப்பட்ட நிலையில், சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் அவர் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸாரால் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து, இரண்டு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.






