சுமந்திரன் மீது அரச தரப்பு விசேட கரிசனை?

இலங்கை நாடாளுமன்றில் இன்று 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதுடன், வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் விருந்துபசார நிகழ்வும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ச உள்ளிட்ட இராஜதந்திரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை பிரதமர் மகிந்த ராஜபக்க்ச மகிழுவுடன் கட்டித்தழுவி கருத்துக்களை பரிமாறிகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, சம்பிரதாயமான இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறுகையில் இராஜதந்திரிகள் கலந்துகொள்வது வழமையாகும்.

எனினும், இன்று சுமந்திரன் மீது அரச தரப்பு விசேடமாக கரிசனை காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது என ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply