பயங்கரவாத தடை சட்டத்தை உடனடியாக இரத்து செய்ய கோரியும் இலங்கையில் இடம் பெற்ற ஜனநாயக போராட்டங்களில் கலந்து கொண்ட போராட்டகாரர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரியும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்திற்கான ஒருங்கமைப்பில் இன்றைய தினம் காலை 10.30 மணியளவில் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
குறித்த போராட்டத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட தரப்பு தமிழர் என்ற வகையில் பயங்கரவாத தடைசட்டத்தை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும் எனவும் ஜனநாயக அறவழி போராட்டத்தில் கலந்து கொண்டமைக்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் மாணவ செயற்பாட்டாளர்களையும், இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்யகோரியும் அவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்ககூடாது எனவும் போராட்டகாரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
குறித்த போராட்டத்தில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு அங்கத்தவர்கள் வவுனியா, கிளிநொச்சி, முல்லைதீவு, மன்னார் மாவட்டத்தை சேர்ந்த பொது மக்கள் பெண்கள் குழுக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மன்னார் மெசிடோ நிறுவன அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்களுக்கான இணையத்தின் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பிற செய்திகள்
- மூன்று தினங்களாக நடுக்கடலில் தத்தளித்த ஈழ அகதிகள்!
- இலங்கை வரும் கோட்டாவிற்கு இராணுவ கொமாண்டோக்களின் விசேட பாதுகாப்பு!
- தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்கும்! – நீதி அமைச்சர் உறுதி
- தொழிலுக்காக கம்பஹா சென்ற சிறுமி நீச்சல் தடாகத்திலிருந்து சடலமாக மீட்பு
- நாட்டைவிட்டு நான் போகலாமா என கோட்டா கேட்டிருந்தால் வேண்டாம் என்றே சொல்லியிருப்பேன்! மகிந்த
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka





