புத்தளம் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அருகில் இன்று இரவுஇடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
பாலாவி பகுதியிலிருந்து புத்தளம் நோக்கிப் பயணம் செய்த முச்சக்கர வண்டியொன்று, முன்னால் சென்ற மற்றெமொரு முச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முற்பட்ட போது, வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
முந்திச் செல்ல முற்பட்ட முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளதுடன், குறித்த முச்சக்கர வண்டி முழுமையாக சேதமடைந்துள்ளது.
அங்கு இரண்டு முச்சக்கர வண்டிகளின் தரப்பினர்கள் ஒன்றுகூடியமையால் அங்கு சில நிமிடங்கள் பதற்ற நிலை காணப்பட்டது.
எனினும், புத்தளம் போக்குவரத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்ததையடுத்து, நிலைமை சுமுகமானது.
சம்பவம் தொடர்பில் புத்தளம் போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்!






