யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையில் சுகயீனம் என வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர் திடீரென உயிரிழந்தார்.
வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 32 வயதுடைய தியாகராசா ஜெயரஞ்சன் என்ற முன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.
குறித்த குடும்பஸ்தர் சில நாட்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டு குணமடைத்திருந்தார். அதன் பின்னர் இன்று சாதாரண சுகயீனம் என வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அவரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரமோகன் மேற்கொள்ளவுள்ளார்.
புத்தளம் விபத்தில் இருவர் காயம்; முச்சக்கர வண்டி கடும் சேதம்!






