
அரசாங்கத்தால் முட்டைக்கு விதிக்கப்பட்ட நிர்ணய விலையை மீறி அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பாவணையாளர் அதிகார சபையின் யாழ்.மாவட்ட இணைப்பு அதிகாரி அறிவித்துள்ளார்.
முட்டைக்கான நிர்ணய விலை பாவனையாளர்கள் அதிகார சபை விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது.
வெள்ளை நிற முட்டை 43 ரூபாவும் , பழுப்பு நிற முட்டை 45 ரூபாவுக்கு விற்பனை செய்ய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆகவே விற்பனையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் , அதிகூடிய விலைக்கு முட்டைளை விற்பனை செய்தல், விலைப்பட்டிகளை காட்சிப்படுத்தாமை, போன்றவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகள் ஊடாக இது தொடர்பில் யாழ் மாவட்ட வர்த்தகர்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது என்று அவர் மேலும் தெரிவித்தார்.





