மண் சரிந்து வீழ்ந்ததில் இளைஞன் உயிரிழப்பு!

கொழும்பு – பேஸ்லைன் வீதியில் கிருலப்பனை எட்மண்டன் வீதியில் இன்று காலை, வெட்டப்பட்ட வடிகானில் மண் சரிந்து வீழ்ந்ததில் இளைஞன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

19 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

வடிகான் வெட்டிக்கொண்டிருந்த இளைஞரே உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஸ்ட அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

இளைஞரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply