நாட்டு மக்களுக்கு பயனளிக்காத வரவு செலவுத்திட்டம்! ஐ.தே.க. குற்றச்சாட்டு

இலங்கை மக்களுக்கு எவ்வித நிவாரணத்தையும் வழங்காது, மக்களின் நேரத்தை வீணடித்த வரவு செலவுத்திட்டம் ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிக் கட்சி தெரிவித்துள்ளது.

ராஜபக்ச குடும்பத்தால் இலங்கையை இனியும் அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச்செல்ல முடியாது. ஆகவே அந்த இயலுமையைக் கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியிடம் ஆட்சியை ஒப்படைக்குமாறும் அந்தக் கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பொது மக்களுக்கு எவ்வித சலுகையும் வழங்கப்படவில்லையென தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சி இன்று மாலை கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தது.

இலங்கையை கொரோனா சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கியது பஹ்ரைன்!

Leave a Reply