உலகளாவிய தொற்றுநோய்க்கு முகங்கொடுத்து நிதியமைச்சர் பசில் ராஜபக்ச முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டம் ‘ரொபின் ஹூட்’ பாணியிலான வரவு செலவுத் திட்டம் என அரசாங்கத்தின் பிரதி கொறடா பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
இந்த வரவு செலவுத் திட்டத்தால் மக்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள் என பலரும் கருதினாலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நிதி அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
வரலாற்றில் முதல் தடவையாக பணக்காரர்களிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏழைகளுக்கு நிவாரணம் வழங்கும் வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க பசில் ராஜபக்ச நடவடிக்கை எடுத்துள்ளார்.
எனவே, இந்த வரவு செலவுத் திட்டத்தை ரொபின் ஹூட் பாணியிலான வரவு செலவுத் திட்டம் என குறிப்பிட முடியும்.
பசில் ராஜபக்ச அரசாங்கத்தின் பின்வரிசை உறுப்பினர்களால் கௌரவிக்கப்படுவார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






