டாட்டூ மோகம்: காட்டேரியாக மாறிய பெண்

மெக்சிக்கோ நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது உடலின் 99 சதவீத பாகங்களில் டாட்டூ குத்திக் கொண்டும் உடலியல் மாற்றங்கள் செய்தும் மாறியதில் தன்னை மக்கள் காட்டேரி என அழைப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த மரியா ஜோஸ் கிறிஸ்டெர்னா என்ற பெண் தனது 14ஆவது வயதில் இருந்தே தன்னுடைய உடலில் விதவிதமான வடிவங்களில் பச்சைக் (டாட்டூ) குத்திக் கொண்டு வந்துள்ளார்.

தற்போதைய நவீன காலத்தில் பல வர்ணங்களில் டாட்டூஷ குத்தப்படுவது பேஷனாக மாறிய நிலையில் அதன்மேல் காதல் கொண்ட குறித்த பெண் தனது உடலின் சுமார் 99 சதவீத பாகங்களில் டாட்டூ குத்தியுள்ளார்.

அத்துட் அவரது அவரது நெற்றி, கைகள் போன்ற உடலின் மற்ற பாகங்களில் ஒருவகை மருந்தை பயன்படுத்தி துளையிடுவதும், வெட்டிவிடுவதும், உப்பவிடுவதுமாக பலவகைகளில் தனது உடலமைப்பை மாற்றிக் கொண்டுள்ளார்.

இந்தச் சாதனை தொடர்பில் அவர் கின்னஸ் உலக சாதனைக்கான யூடியூப் சேனலில் பேசும்போது,

‘‘உலகில் அதிக உடல் மாற்றங்களைக் கொண்ட பெண் என்ற அதிகாரப்பூர்வ சாதனையைப் பெற்றுள்ளேன்.

ஆனால், என்னை மக்கள் ‘காட்டேரி பெண்’’ என்றே அழைக்கின்றனர். இது எனது முயற்சிக்கு கவலையை தருகின்றது.

என்னை பின்பற்றுபவர்கள் கவனமாக செயற்பட வேண்டும். இல்லை என்றால், டாட்டூவால் ஆபத்துகளும் ஏற்படலாம்’’ என்றார்.

Leave a Reply